நீர் கடுப்பு இயற்கை மருத்துவ முறைகள்

நீர் கடுப்பு இயற்கை மருத்துவ முறைகள்

உடல் உஷ்ணம் அடையும் போது உடலை குளிர்விக்க இரத்தம் வேகமாக இரத்த நாளங்களில் செல்ல தொடங்குகிறது. இரத்தத்தில் 90 சதவிகிதம் நீர் உள்ளது இதை மனித உடலின் தோள் இரத்தத்தில் உள்ள நீரை உறிஞ்சி வியர்வையாக வெளியேற்றி உடலை குளிர்ச்சியடைய செய்கின்றது இருந்த போதும் தோள் பகுதி தொடர்ந்து இச் செயலில் ஈடுபட்டால் இரத்ததில் உள்ள நீரின் அளவு குறைந்து கொண்டே சென்று இறுதியில் உடல் உள் உறுப்புகளை வெப்பம் தாக்குகிறது. இதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக குழாய்கள், மற்றும் சிறுநீர் பை பாதிப்படைந்து நீர்கடுப்பினை ஏற்படுத்துகிறது.

நீர்கடுப்பு எப்படி உண்டாகிறது ?

சிறுநீரகம் இரத்ததை சுத்தப்படுத்தி தேவையற்ற உப்பு மற்றும் சில கழிவுகளை எளிமையாக வெளியேற்ற குறிப்பிட்ட அளவு நீர் தேவை அதயே சிறுநீராக வெளியேற்றுகிறோம். ஆனால் உடல் உஷ்ணம் காரணமாக தேவயான நீர் கிடைக்காமல் சிறுநீரகம் இரத்தத்தை சுத்தம் செய்து அதில் இருந்து எடுக்கப்பட்ட உப்பு மற்றும் கழிவுகளை வெளியேற்றும் போது குறைந்த நீரில் அதிகப்படியான உப்புகள் சிறுநீர் குழாய்யை உட்புர சதையை அரித்துக் கொண்டு செல்வதால் எரிச்சல், வலி போன்றவைகள் ஏற்படும்.

நீர் கடுப்பு அறிகுறிகள்?

ஆண், பெண் உறுபில் எரிச்சல், அடிக்கடி சிறுநீர்கழிக்கும் எண்ணம் ஏற்படுதல் , எதிர்பார்த்த அளவு வராதல், சில சமயம் சிறுநீரில் இரத்த திசுக்கள் கலந்து நிறம் மாறி செல்வதை காணலாம், கண் எரிச்சல், தலையில் உஷ்ணம் போன்றவைகள்

சிறுநீர் கடுப்பிற்க்கான அறிகுறிகள்

நீர்கடுப்பு வராமல் தடுக்க, அதிகப்படியான நீரை பருகுங்கள், குளிர்ச்சியான பழங்களை சாப்பிடுங்கள், வெந்தயம், சீரக குடிநீர், மோர், நன்னாரி கிழங்கு சாறு, பால், குளிர்சியான காய்கள் போன்றவைகளை சாப்பிடலாம். வெய்யில் காலங்களில் தினம் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும், அடிக்கடி தலைமுடிக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். வெங்காயம், வெள்ளரிகாய், தர்பூசணி, எலுமிச்சை பழ சாறு சர்பத், பழைய சாத கூழ், ராகி மற்றும் கம்மங் கூழ் போன்ற உணவுகளை சாப்பிட நீர்கடுப்பு வரவாய்ப்பே இல்லாமல் போகும். இவைகள் விலையும் குறைவுதான்.
குளிர்ச்சியான கறிவைகைள்
ஆட்டு கறி உடல் குளிர்ச்சிக்கு சிறந்தது, பன்றி கறி அதிக குளிர்ச்சியானது ஆகையால் குறைந்த மிக குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கறியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நீர் கடுப்பு உண்டாக முக்கிய காரணம்

அதிக உப்பு உள்ள உணவுகள், தக்காளி, புளி, கோழிக்கறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், அதிகப்படியான காரம், அஜினமோட்டோ கலந்த உணவுகள், தலை முடிக்கு எண்ணெய் வைக்காமல் வெய்யிலில் சுற்றுவது. வெப்பமான இடத்தில் வேளை செய்வது, சில மாத்திரைகள் அதிகப்படியான உஷ்ணத்தை உண்டாக்கும். மது மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்கவும்.

தவிர்க்க முடியான ஆபத்தான உணவுகள்.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பது முன்னேர்கள் வாக்கு. என்பதற்க்கு ஏற்ப ஒரு ருசியான உணவை சாப்பிட தவிர்க்க முடியாத நிலையில் சாப்பிட்டால் உஷ்ணம் அதிகரிக்கும் என்றால் அவ்உணவை சாப்பிட்ட (மூக்கு பிடிக்க வெட்ட வேண்டாம்) பின் குளிர்ச்சியான உணவு சாப்பிட்டால் இரண்டும் சமன்பட்டு போகும் உஷ்ணம் கட்டுக்குள் இருக்கும், உதாரணமாக சிக்கன் தந்தூரி, சில்லி, கே.எப்.சி சாப்பிடும் போது அதிகபடியான வெங்காயம், தயிர், மோர் அல்லது பழ வகைகள் சேர்க்கவும்.

நீர் கடுப்பு குணமாக வைத்திய முறைகள்

நீர் முள்ளி இலையை சுத்தம் செய்து உரலில் போட்டு நன்றாக இடித்து சாதம் கொதிக்கும் போது கிடைக்கும் நீரை ஒரு ஆழாக்களவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் இடித்து வைத்துள்ள நீர்முள்ளி இலையை போட்டு அப்படியே மூடி விட வேண்டும் சுமார் ஒரு மணி நேரம் ஆன பின்பு வடிகட்டி குடித்து விடவேண்டும். இவ்விதமாக இரண்டு நாள் காலை, மாலை சாப்பிட எப்படி பட்ட நீர் கடுப்பும் குணமாகி போகும்.

குறிப்பு:  நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.

About the Author

Leave a Reply

*

%d bloggers like this: