ஈதுல் அத்ஹா பெருநாள் தினத்தன்று குடும்பக் கூட்டங்களையும் தவிர்க்க வலியுறுத்தல்.

ஈதுல் அத்ஹா பெருநாள் தினத்தன்று குடும்பக் கூட்டங்களையும் தவிர்க்க வலியுறுத்தல்.


Oman News: Avoid getting together for Eid al-Adha celebrations.

சுப்ரீம் கமிட்டி கூட்டம் தேசிய அவசரநிலை மேலாண்மை மையத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து வரும் குடிமக்களுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

வரும் ஈதுல் அத்ஹா புனித பெருநாள் தினத்தில் பொது மக்கள் யாரும் அதிகமாக நடமாட வேண்டாம் என்றும், அதே போல் உறவினர்கள் நண்பர்கள் என்று ஒன்று கூடுவதையும் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களாக இருப்பதால் பெருநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு ஒமானின் உள்துறை அமைச்சரும், குழு தலைவருமான சயீத் ஹமூத் பின் பைசல் அல் புசைதி தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் கொரோனா தொற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதன் பரவலைத் தவிர்ப்பதற்கான வழிகள் மற்றும் அதன் பல்வேறு தாக்கங்களை எப்படித் தடுப்பது மற்றும் சமாளிப்பது குறித்துத் தொடர்ந்து பேசினார்.

GCC Tamil News

ஒமானில் மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் நடமாட்டம், அனைத்து பொது இடங்கள் மற்றும் கடைகள் மூடப்படுகிறதா என்பதைப் போன்ற ஊரடங்கு நிலை குறித்து குழுவில் விவாதிக்கப்பட்டது.

ஈத் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியது. முடிந்தவரைப் பகல் நேரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைக் குறைக்கவும் வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நோய்த் தொற்று பரவுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் எந்தவொரு சமூக மற்றும் குடும்ப கூட்டங்களையும் தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழு உறுதிப்படுத்தியது.

Keyword: Oman News, Gulf  Tamil News, GCC Tamil News, வளைகுடா செய்திகள்

Tamil News

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: