பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்.

பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னால் மத்திய நிதி அமைச்சருமாகிய அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 12:07 க்கு மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி அவர்கள் சிகிச்சை பெற்று வந்தார்.  ஒனபதாம் தேதி சுவாசப் பிரச்சனைக் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில், தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிந்தார்.  பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், மத்திய நிதியமைச்சராகவும் பதவி வகித்தார்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உடல் நிலையை கருத்தில் கொண்டு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: