அமீரகத்தில் கொரோனா விதிமீறலுக்காக விதிக்கும் தவறான அபராதத்தை புகார் அளிக்கலாம்.

அமீரகத்தில் கொரோனா விதிமீறலுக்காக விதிக்கும் தவறான அபராதத்தை புகார் அளிக்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா விதிமீறல் காரணமாக அதிகாரிகள் தவறாக அபராதம் விதிக்கப்பட்டதாக நினைத்தால் அதை புகாராக பதிவு செய்யலாம். இந்த தகவலை அமீரக பொது வழக்குத்துறை அறிவித்துள்ளது. புகார்கள் தெரிவிக்க அமீரக பொது வழக்குத் துறையின் ஸ்மார்ட் அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.

அபராதம் விதிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் விதிமீறலில் ஈடுபட்டவர் அல்லது அவரின் சார்பாக அவரது பிரதிநிதி புகார் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தவறான அபராதத்தை எதிர்த்து புகாரளிக்க அமீரக பொது வழக்குத் துறையின் இணையதளத்தையோ அல்லது ஸ்மார்ட் அப்ளிகேஷனையோ பயன்படுத்தலாம். பொது வழக்குத்துறைக்கு புகார்களை ஏற்கவோ அல்லது தள்ளுபடி செய்யும் உரிமையுண்டு. இது சம்பந்தமாக மேலதிக தகவல்களுக்கு www.pp.gov.ae என்னும் இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

இது சம்பந்தமாக அமீரக பப்ளிக் புராசிகியுஷன் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: