முதல் முதலாக 5 ஜி நெட்வொர்க்கில் புதிய ரோந்து அறிமுகம்.

முதல் முதலாக 5 ஜி நெட்வொர்க்கில் புதிய ரோந்து அறிமுகம்.

துபாய்: உயர் தொழில்நுட்ப கேமராக்களை 5 ஜி நெட்வொர்க் வழியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் மூலம் கட்டுப்படுத்தும் ரோந்து வாகனத்தைத் துபாய் காவல்துறை எத்திசலாத் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை தொடங்கியது. இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட முதல் 5 ஜி நெட்ஒர்க் மூலம் இயக்கப்படும் ரோந்து என்பது குறிப்பிடத்தக்கது. ரோந்துக்கு AI தொழில் நுட்பங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் இயக்கும் திறனைக் கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த 5 ஜி- தொழில் நுட்பம் மூலம் இயக்கப்படும் ரோந்தினால் பாதுகாப்பு சம்பந்தமான தரவுகளை விரைவாக மாற்ற முடியும். இதனால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ரோந்து கேமராவின் மூலம் பெறப்படும் படங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மிக உயர்ந்த தெளிவுத்திறனுடன் மேலும் முக அடையாளங்களைத் தொழில்நுட்பத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எத்திசலாத்தின் அரசு நிறுவன விற்பனைக்கான மூத்த துணைத் தலைவர் அப்துல்லா இப்ராஹிம் அல் அகமது கூறினார்.

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: