வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் கட்ட விமான சேவைக்கு முன்பதிவு ஆரம்பம்.

வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் கட்ட விமான சேவைக்கு முன்பதிவு ஆரம்பம்.


UAE News : Booking of the 5th phase of Vande Bharat project begins.

வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் கட்ட விமான சேவையில் அமீரகத்திலிருந்து சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானங்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது.

வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் கட்ட விமான சேவையாக அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்பட இருக்கும் ஏர் இந்தியா விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (திங்கள்) மாலை 4 மணிக்கு துவங்குவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தில் பயணம் குறித்து பதிவு செய்திருப்போர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இணையதளத்திலோ, அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜெண்ட்கள் மூலமாகவோ தங்களுக்கான டிக்கெட்டை சிறப்பு விமானங்களுக்கான வழக்கமான கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்” என துணைத் தூதரகம் தமது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

UAE News :

அடுத்த ஆகஸ்டு மாதம் 2 முதல் 15 ஆகிய தேதிகளில், ஷார்ஜாவிலிருந்து இந்தியாவின் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, அம்ரிஸ்தர், கயா மற்றும் அகமதாபாத் செல்வதற்கான விமான டிக்கெட் முன்பதிவு இன்று நடைபெற இருக்கிறது.

டிக்கெட் முன்பதிவிற்கு பாஸ்போர்ட் மற்றும் தொடர்பு முகவரி பற்றிய தகவல்கள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

keyword: UAE News, UAE Tamil News, Gulf News Tamil, GCC Tamil News

Tamil News

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: