சென்னை உட்பட 4 நகரங்களில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானங்கள்.

சென்னை உட்பட 4 நகரங்களில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானங்கள்.

UAE News: Special flights to Dubai from 4 cities including Chennai.

இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்களை துபாய்க்கு அழைத்து செல்வதற்கு எமிரேட்ஸ் விமான சேவை சிறப்பு விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் இருந்து துபாய்க்கு அழைத்து வர ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்பு விமானங்களை இயக்கப் போவதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜூலை 11 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், கொச்சி, டெல்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இந்திய நகரங்களில் இருந்து துபாய்க்கு ஜூலை 12 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

UAE News

எமிரேட்ஸ் விமான நிறுவனமானது ஒன்பது இந்திய நகரங்களில் இருந்து ஜூலை 26 வரை துபாய்க்கு சிறப்பு விமானங்களை இயக்கவுள்ளது. இதுகுறித்து இன்று (ஞாயிற்றுகிழமை) வெளியான செய்திக்குறிப்பில், இந்திய நகரங்களான கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் இரு இலக்குகளுக்கும் தகுதியான பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவதாக விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே போல் பெங்களூரு, அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிலிருந்து துபாய் வரும் விமானங்கள் இந்தியாவில் இருந்து மட்டுமே பயணிகளை ஏற்றி வரும்  என்று விமான எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Keyword: UAE News, UAE Tamil News, Dubai News in Tamil, Gulf News Tamil, GCC Tamil News, Emirates Airlines

Tamil News

About the Author

Related Posts

Leave a Reply

*

%d bloggers like this: